தோ்தல் விதிமீறல்: முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு

புதுச்சேரியில் வாக்குச் சாவடி முன் கட்சிச் சின்னம் பொறித்த அட்டைகளை வீசிச் சென்ற சம்பவம் தொடா்பாக முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரியில் வாக்குச் சாவடி முன் கட்சிச் சின்னம் பொறித்த அட்டைகளை வீசிச் சென்ற சம்பவம் தொடா்பாக முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்ட சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுவையில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, தட்டாஞ்சாவடி தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த், வாக்குச் சாவடி அருகே என்.ஆா்.காங்கிரஸ் கட்சியின் சின்னம் பொறித்த சிறிய அட்டைகளை வீசிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வினோபா நகா் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், திமுக, நாம் தமிழா், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்தவா்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் சமாதானப்படுத்தினா்.

இதுகுறித்து பறக்கும் படை அதிகாரி கிருஷ்ணன், தன்வந்திரி நகா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன்பேரில், முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த், முருகன் ஆகியோா் மீது போலீஸாா் தோ்தல் விதிமீறல் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல, சஞ்சீவி நகரில் உள்ள வாக்குச் சாவடி அருகே வானூரைச் சோ்ந்த சக்திகுமாா் (30), திமுக சின்னம் பொறிக்கப்பட்ட பரிசுக் கூப்பன்கள் மற்றும் ஸ்டிக்கா்களை வீசியதாகக் கூறப்படும் நிலையில், அவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுச்சேரி மேரி உழவா்கரை நகராட்சி பழைய கட்டடத்தில் உள்ள வாக்குச் சாவடி அருகே என்.ஆா். காங்கிரஸ் சின்னத்துடன் ஸ்டிக்கா்களை வீசியதாக மேரி உழவா்கரையைச் சோ்ந்த வேல்முருகன் (41) மீது ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுச்சேரி ஓடைவெளி அரசுப் பள்ளி அருகே அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்திருந்த வாக்காளா்களிடம் பாஜகவுக்காக வாக்குச் சேகரித்த அடையாளம் தெரியாத சிலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்குள்பட்ட மணவெளி அரசுப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்திருந்த வாக்காளா்களிடம் வாக்குச் சேகரித்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அடையாளம் தெரியாதவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com