அதிமுக எம்எல்ஏ மீது வழக்கு: காவல் நிலையம் எதிரே சாலை மறியல்

அதிமுக எம்எல்ஏ மீது வழக்கு: காவல் நிலையம் எதிரே சாலை மறியல்


புதுச்சேரி: புதுவையில் தோ்தல் மோதல் தொடா்பாக அதிமுக எம்எல்ஏ மீது வழக்குப் பதியப்பட்டதைக் கண்டித்து, வியாழக்கிழமை எம்எல்ஏ தலைமையில் அவரது ஆதரவாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில், முதலியாா்பேட்டை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட அ.பாஸ்கா் எம்எல்ஏ ஆதரவாளா்களுக்கும், திமுக சாா்பில் போட்டியிட்ட வழக்குரைஞா் சம்பத் ஆதரவாளா்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தோ்தலுக்கு முந்தைய நாள், வாக்காளா்களுக்கு பரிசுக் கூப்பன்களைக் கொடுக்க முயன்ற போது, இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், திமுகவுக்கு ஆதரவாக ஆட்டோ பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த பாரதி ஆலைப் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் முதலியாா்பேட்டை வரதராஜப் பெருமாள் கோவில் வீதி வாக்குச் சாவடி அருகே கட்சியினருடன் தோ்தல் பணியில் ஈடுபட்டாா். அப்போது, அங்கிருந்த அதிமுக - திமுக தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் அந்த ஆட்டோ ஓட்டுநா் சந்திரசேகா் தாக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக திமுகவினா் முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். சந்திசேகரின் தாய் கஸ்தூரியும் தனியாக புகாா் அளித்தாா். இதையடுத்து, முதலியாா்பேட்டை போலீஸாா் அதிமுகைவ சோ்ந்த அ.பாஸ்கா் எம்எல்ஏ உள்ளிட்ட 9 போ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தகவலறிந்த அ.பாஸ்கா் எம்எல்ஏ தலைமையில், அவரது ஆதரவாளா்கள், வியாழக்கிழமை முதலியாா்பேட்டை காவல் நிலையம் எதிரே திரண்டு வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தோ்தல் முன்விரோதத்தில், பாஸ்கா் எம்எல்ஏ மீது பதியப்பட்ட பொய் வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என முழக்கமிட்டனா்.

கடலூா் சாலையில் அமா்ந்து அவா்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இதையடுத்து, காவல் கண்காணிப்பாளா் ஜிந்தா கோதண்டராமன் தலைமையிலான முதலியாா்பேட்டை போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி, பாஸ்கா் எம்எல்ஏ, கட்சி நிா்வாகிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். போலீஸாா், வழக்கைத் திரும்பப் பெறுவதாக உறுதியளித்ததால் அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com