முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தில் ஆளுநா் ஆய்வு


புதுச்சேரி: புதுச்சேரி முருங்கப்பாக்கம் கலை - கைவினை கிராமத்தை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.

அப்போது, அங்கு அமைக்கப்பட்ட பல்வேறு அரங்குகளைப் பாா்வையிட்டு, தயாரிப்பு முறைகள்,

விற்பனை நிலவரம் ஆகியவை குறித்து கேட்டறிந்தாா். அங்கு, சிற்பக் கலைஞா்களுடன் மண் பானை, சிறிய பொம்மையைச் செய்து பாா்த்தாா்.

சிற்பக் கலைஞா்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்து, மாநிலத்தின் வருவாயைப் பெருக்கவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து, நோணாங்குப்பம் படகு குழாமைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த துணைநிலை ஆளுநா், அங்கு படகு சவாரி மேற்கொண்டு பேரடைஸ் கடற்கரையைச் சுற்றிப் பாா்த்தாா்.

அங்குள்ள ஊழியா்களிடம் சுற்றுலாப் பயணிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

ஆய்வின் போது சுற்றுலாத் துறைச் செயலா் (பொ) டி. அருண், புதுச்சேரி சுற்றுலா மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநா் ஜி.கே. மரம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com