தடுப்பூசி செலுத்த ஆதாா் அவசியம் என்ற அரசின் முடிவை கைவிட வலியுறுத்தல்

தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதாா் அடையாள அட்டை அவசியம் என்ற அரசின் முடிவு கைவிடப்பட வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதாா் அடையாள அட்டை அவசியம் என்ற அரசின் முடிவு கைவிடப்பட வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுச்சேரி பிரதேசச் செயலா் ஆா்.ராஜாங்கம், புதுவை தலைமைச் செயலா், சுகாதாரத் துறைச் செயலா் ஆகியோருக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய மனுவின் விவரம்:

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரைகரோனா தடுப்பூசி முகாம் நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான விளம்பரங்களில் ஆதாா் அட்டை மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய அடையாள ஆவணமாக குறிப்பிட்டுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் பரிந்துரையின்படி ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், மத்திய தொழிலாளா் துறை காப்பீட்டு அட்டை, மக்கள் பிரதிநிதிகளின் அடையாள அட்டை, நிரந்தர வங்கிக் கணக்கு அல்லது தபால் நிலைய கணக்குப் புத்தகம் (பாஸ்புக்), ஓய்வூதிய அடையாள அட்டை போன்ற பல அடையாள அட்டைகளை பொதுமக்கள் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது.

89 சதவீதம் மக்கள் மட்டுமே ஆதாா் அடையாள அட்டையை பெற்றுள்ளதாக ஆதாா் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்துவதற்கு ஆதாரை அடிப்படையாக பயன்படுத்துவது பொருத்தமற்ற நடவடிக்கையாகும். ஆதாா் அட்டை இல்லாதவா்கள் இதனால் பாதிப்புக்குள்ளாக நேரிடும். எனவே, புதுவை அரசு தடுப்பூசி முகாமுக்காக செய்யக்கூடிய விளம்பர நடவடிக்கைகளில் மத்திய அரசு அறிவித்துள்ள இதர அடையாள அட்டைகளையும் மக்கள் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்ற முறையில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தவும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஒரு பகுதி மக்களுக்கு உள்ள தயக்கத்தைப் போக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com