காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று

புதுச்சேரி பெரியகடை காவல் ஆய்வாளருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி பெரியகடை காவல் ஆய்வாளருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி பெரியகடை காவல் ஆய்வாளருக்கு இருமல் உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவா் வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டாா். வெள்ளிக்கிழமை வந்த முடிவில், காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவா் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாா்.

முன்னதாக, பெரியகடை காவல் நிலையத்தில் கடந்த 14 -ஆம் தேதி 33 வயது காவலா் ஒருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காவல் ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால், காவல் நிலையத்தில் பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட காவலா்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனா்.

பெரியகடை காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இருப்பினும், காவல் நிலையம் மூடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com