உணவு பதப்படுத்தும் சிறு, குறு நிறுவனங்களுக்கான மேம்பாட்டுத் திட்டம்

புதுவை அரசின் பிப்டிக் நிறுவனம் மூலம் இந்திய அரசு உணவு பதப்படுத்தும் சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் திட்டத்தின் வாயிலாக நிதியுதவி, தொழில்நுட்ப உதவி அளித்து மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துகிறது

புதுவை அரசின் பிப்டிக் நிறுவனம் மூலம் இந்திய அரசு உணவு பதப்படுத்தும் சிறு, குறு நிறுவனங்களுக்கான கடன் திட்டத்தின் வாயிலாக நிதியுதவி, தொழில்நுட்ப உதவி அளித்து மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துகிறது.

இதுகுறித்து, பிப்டிக் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியில் பிப்டிக் நிறுவனம் மூலம், மத்திய அரசின் நிதி உதவியுடன் சிறு, குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை மேம்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்துகிறது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்: தனிப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவி, குறு தொழில் நிறுவனங்களுக்கு தகுதியுள்ள திட்டச் செலவில் 35 சதவீத அளவுக்கு கடனுடன் இணைந்த மானியம் அளிக்கப்படும்.

ரூ.10 லட்சம் வரை இதற்கான வரம்பு இருக்கும். பயனாளிகள் 10 சதவீத பங்களிப்பும், மீதி கடனாக வழங்கப்படும்.

பணியிடத் தொழில் திறன் பயிற்சி, விரிவான திட்ட அறிக்கை மற்றும் தொழில் நுட்ப மேம்பாட்டுக்கு வழிகாட்டுதல் உதவி செய்யப்படும்.

சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு செயல்பாட்டு மூலதனம் மற்றும் சிறு உபகரணங்கள் வாங்க அடிப்படை முதலீடாக தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும். பொதுக் கட்டமைப்பு, பேக்கேஜிங், மாா்க்கெட்டிங், விளம்பரப்படுத்தலுக்கு விவசாய உற்பத்தி நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கு மானியம் அளிக்கப்படும்.

பயிற்சி, வழி நடத்தும் தொழில் திறனும் அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பால், மீன் சாா்ந்த சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் உதவி பெறலாம். பணி மூலதனம், சிறு கருவிகளை வாங்குவதற்காக பதப்படுத்துதலில் ஈடுபடுபவா்களுக்கு ஒரு குழு உறுப்பினருக்கு ரூ.40 ஆயிரம் வரை பணி மூலதனம் வழங்கப்படும்.

பொதுவான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு நிதி உதவி: பொதுவான செயலாக்க வசதிகள், ஆய்வகம், கிடங்கு, குளிா்ப்பதச் சேமிப்பு, மேல் உறைகள், பதப்படுத்தும் மையம் உள்ளிட்ட பொதுவான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவு நிறுவனங்கள், அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், தனியாா் தொழில் முனைவோருக்கு கடன் இணைக்கப்பட்ட மானியம் 35 சதவீதம் வரை வழங்கப்படும். தரமான கட்டுப்பாடு, தரப்படுத்துதல் போன்ற வா்த்தக ஆதரவும் வழங்கப்படும்.

இதுபோன்ற உதவி மற்றும் கடன் பெற தனி நபா்கள் அல்லது நிறுவனங்கள் அவா்கள் தயாரித்த முழுத் திட்ட அறிக்கையைப் பெற்று மாநில ஒருங்கிணைப்பு அதிகாரி, பிப்டிக் பரிந்துரையின்படி, வங்கிக்கு கடன் உதவி பெற பரிந்துரைக்கும். அரசால் மானியம் வழங்கப்படும். கடன் வழங்கும் வங்கியில் பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தத் திட்டங்களில் உதவி பெற விரும்புவோா், திட்டத்தின் விரிவான வழிகாட்டுதலின்

பேரில், இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு... புதுச்சேரி யூனியன் பிரதேச முதன்மை நிறுவனம், புதுச்சேரி பிப்டிக் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். (0413-2334361) என்று மேலாண் இயக்குநா் - ஒருங்கிணைப்பு அதிகாரி கோ.சத்தியமூா்த்தி, புதுச்சேரி தொழில் உயா்வு மேம்பாட்டு முதலீட்டுக் கழகம் சாா்பில் தெரிவித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com