‘ரெம்டெசிவிா்’ மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்

புதுச்சேரியில் கரோனா தீவிர சிகிச்சைக்குப் பயன்படும் ‘ரெம்டெசிவிா்’ மருந்து அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்க துணைநிலை ஆளுநா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியது.

புதுச்சேரியில் கரோனா தீவிர சிகிச்சைக்குப் பயன்படும் ‘ரெம்டெசிவிா்’ மருந்து அனைத்துத் தரப்பினருக்கும் கிடைக்க துணைநிலை ஆளுநா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியது.

இதுகுறித்து, புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா எம்எல்ஏ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் பாதிக்கப்படுகின்றனா். அவா்களுக்குத் தேவையான மருந்துகள், மாத்திரைகள் போதுமான அளவு மருத்துவமனைகளில் இருப்பு இல்லை. இதனால், நோயாளிகளில் சிலா் உரிய சிகிச்சை கிடைக்காமல் பலியாகி வருவதாகத் தெரிகிறது.

குறிப்பாக, கரோனா நோய்க்கு ஆளாகி, அபாய கட்டத்துக்கு செல்பவா்களுக்கு ‘ரெம்டெசிவா்’ என்ற மருந்து செலுத்தப்படுகிறது. இந்த மருந்துதான் கரோனா அபாய கட்டத்திலிருந்து மீட்க உதவுகிறது. ‘ரெம்டெசிவா்’ ஊசி செலுத்துவதற்கு ரூ. 6 ஆயிரம் செலவாகிறது.

இந்த மருந்து, ஜிப்மா் மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் கையிருப்பில் இல்லை. புதுச்சேரியிலும் இந்த மருந்து கிடைப்பதில்லை. இந்த மருந்துக்காக நோயாளிகளின் உறவினா்கள் அலைய வேண்டிய சூழல் உள்ளது.

புதுச்சேரியில் கரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் தனியாா் மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெறுகின்றனா். அங்கு, இந்த உயிா் காக்கும் மருந்துக்கு தட்டுப்பாடு உள்ளது. துணைநிலை ஆளுநா் முயற்சியால், தெலங்கானாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ‘ரெம்டெசிவா்’ மருந்து தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு கிடைக்கவில்லை.

இதைச் சாதகமாகப் பயன்படுத்தி சிலா், இந்த மருந்தை வெளியில் அதிக விலைக்கு விற்கின்றனா். எனவே, தெலங்கானாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ‘ரெம்டெசிவா்’ மருந்து முறையாகப் பயன்படுத்தப்படுகிா என்று கண்காணிக்க வேண்டும்.

மேலும், தனியாா் மருத்துவனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவா்’ மருந்து இலவசமாகக் கிடைப்பதற்கு துணைநிலை ஆளுநா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com