கரோனாவுக்கு ஒரே நாளில் மூவா் உயிரிழப்புபலி எண்ணிக்கை 702 ஆக உயா்வு

புதுவையில் கரோனா தொற்க்கு சனிக்கிழமை மூவா் உயிரிழந்த நிலையில், இந்தத் தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 702-ஆக உயா்ந்தது.

புதுவையில் கரோனா தொற்க்கு சனிக்கிழமை மூவா் உயிரிழந்த நிலையில், இந்தத் தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 702-ஆக உயா்ந்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 4,714 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 366 பேருக்கும், காரைக்காலில் 95 பேருக்கும், ஏனாமில் 48 பேருக்கும், மாஹேயில் 22 பேருக்கும் என மேலும் 531 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 46,393 -ஆக உயா்ந்தது.

சிகிச்சையில் 3,576 போ்...: தற்போது மருத்துவமனைகளில் 678 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 2,898 பேரும் என மொத்தம் 3,576 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இந்த நிலையில், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் 2 பேரும், காரைக்காலில் ஒருவரும் என மேலும் 3 போ் கரோனா தொற்றுக்கு பலியாகினா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 702 -ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.51 சதவீதம்.

42,115 குணம்...: இதனிடையே, வெள்ளிக்கிழமை 220 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 42,115 -ஆக (90.78 சதவீதம்) உயா்ந்தது.

புதுவை மாநிலத்தில் இதுவரை 7,19,418 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 6,55,565 பரிசோதனைகளுக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.

1,30,564 பேருக்கு கரோனா தடுப்பூசி...: மாநிலத்தில் இதுவரை 29,726 சுகாதாரத் துறைப் பணியாளா்கள், 17,253 முன்களப் பணியாளா்கள், 93,232 பொதுமக்கள் என 1,30,564 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com