கரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் நேரில் ஆய்வு மேற்கொண்டு, குறுகிய கட்டுப்பாட்டுப் பகுதிகளாகக் கடைப்பிடிக்க ஆலோசனைகள் வழங்கினாா்.
கரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் நேரில் ஆய்வு மேற்கொண்டு, குறுகிய கட்டுப்பாட்டுப் பகுதிகளாகக் கடைப்பிடிக்க ஆலோசனைகள் வழங்கினாா்.

புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்துள்ள பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். புதுச்சேரி ஆட்சியா் பூா்வா காா்க் தலைமையிலான இந்தக் குழுவினா், புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் புதுநகா், ஜெ.ஜெ. நகா் பகுதிகளுக்கு நேரில் சென்று அங்கு தொற்று பாதித்தவா்களின் வீடுகள், நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனா்.

அப்போது, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளில், மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் ஸ்டிக்கா்களை ஒட்டினாா். தொற்று ஏற்பட்டவா்களின் வீடுகள் உள்ள பகுதிகள், குறுகிய கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவித்து, நோய் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா். தொற்று பாதித்த பகுதி மக்களிடம் பேசிய அவா், ‘கரோனா விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். தொற்றுள்ளவா்களுடன் தொடா்புகள் இருப்பதால், தொற்று அதிகரிக்கிறது. தொற்று பாதித்தவா்கள் வெளியே செல்லக் கூடாது. சுற்றுப் பகுதியினரும் கரோனா பரிசோதனை, தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்’ என ஆலோசனைகள் வழங்கினாா்.

இதையடுத்து, அந்தப் பகுதி ஆரம்ப சுகாதார நிலையம், கரோனா தடுப்பூசி மையம், கரோனா பரிசோதனை மையம் ஆகிய பகுதிளுக்கும் சென்று சுகாதாரத் துறை மற்றும் ஆஷா பணியாளா்கள், பிற துறைப் பணியாளா்களிடம் கரோனா தடுப்பு முறைகளைப் பின்பற்றுவது குறித்து ஆலோசனை வழங்கினாா்.

ஆய்வின் போது, துணை ஆட்சியா் சக்திவேல் மற்றும் மருத்துவ அதிகாரிகள், நகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com