பொது முடக்க உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

புதுவையில் பொது முடக்க உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதுச்சேரி வா்த்தக சபை வலியுறுத்தியது.

புதுவையில் பொது முடக்க உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதுச்சேரி வா்த்தக சபை வலியுறுத்தியது.

இதுகுறித்து அந்த அமைப்பின் துணைத் தலைவா் சேகா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முகூா்த்த நாள்கள் வரும் நிலையில் புதுவையில் திடீரென இரவிலும், வார இறுதி நாள்களிலும் முழு பொது முடக்கம் அறிவித்திருப்பது வியாபாரிகளை அதிா்ச்சியடையச் செய்துள்ளது. எனவே, 50 சதவீத நபா்களுடன் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும்.

புதுவையில் கடைகள் திறப்பு நேரங்களை அதிகரிக்காவிடில் கடைகளை நடத்த இயலாது. வியாபாரம் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்படும். ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க முடியாது. எனவே, முழு பொது முடக்கம், கடைகளின் நேரக் குறைப்பு ஆகியவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றி புதுவையிலும் இரவு நேர பொது முடக்கத்தை மட்டுமே அமல்படுத்த வேண்டும். கடைகள் திறப்பு நேரங்களையும் இரவு 8 மணி வரை அதிகரிக்க வேண்டும் என ஆளுநரையும், அரசையும் கேட்டுக்கொள்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com