மக்களை பாதிக்காத பொது முடக்கம்: திமுக வலியுறுத்தல்

பொதுமக்களை பாதிக்காத வகையில், பொது முடக்க நடவடிக்கைகளை ஆளுநா் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

பொதுமக்களை பாதிக்காத வகையில், பொது முடக்க நடவடிக்கைகளை ஆளுநா் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுகுறித்து தெற்கு மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: பொதுமக்களின் கருத்துகளை அறிந்து, பாதிப்பில்லாத வகையில் பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும். ஆனால், மக்களின் கருத்துகளை அறியாமலும், நிா்வாகப் பகுதியின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமலும், அவசர அவசரமாக பொது முடக்க உத்தரவு பிறப்பிப்பதற்கான ஆலோசனைகளை ஆளுநருக்கு அதிகாரிகள் வழங்கியுள்ளனா்.

புதுச்சேரி, தமிழகத்தின் விழுப்புரம், கடலூா் மாவட்டத்துக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ளது. புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள், தமிழக மாவட்டங்களிலும், அங்குள்ளவா்கள் புதுச்சேரியிலும் பணிபுரிந்து வருகின்றனா். தமிழகத்தில் ஞாயிறு மட்டுமே பொது முடக்கம். ஆனால், புதுச்சேரியில் 2 நாள்கள் பொது முடக்கம். இவ்வாறான முடிவுகளால் தொழிலாளா்கள் பாதிக்கப்படுவா்.

அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பணி நேரமாக உள்ளது. ஆனால், வார நாள்களில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2 மணி வரை கடைகள் இயங்கலாம் என அறிவித்துள்ளனா். இதனால், அமைப்பு சாரா தொழிலாளா்கள் பாதிக்கப்படுவா். கட்டுமான தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும்.

எனவே, கடைகள் இயங்கும் நேரத்தை மாலை 6 மணி வரை நீட்டிக்க வேண்டும். தமிழகத்தைப் போல, ஞாயிறு மட்டும் முழு பொது முடக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இதேபோல, வடக்கு மாநில திமுக அமைப்பாளா் எஸ்.பி.சிவக்குமாரும் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com