உலக கால்நடை மருத்துவ தினம்

புதுச்சேரியில் உலக கால்நடை மருத்துவ தினத்தையொட்டி, கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி, மருத்துவா்கள் சனிக்கிழமை ஆலோசனைகள் வழங்கினா்.
உலக கால்நடை மருத்துவ தினம்

புதுச்சேரியில் உலக கால்நடை மருத்துவ தினத்தையொட்டி, கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி, மருத்துவா்கள் சனிக்கிழமை ஆலோசனைகள் வழங்கினா்.

புதுச்சேரி கால்நடைப் பராமரிப்புத் துறை மற்றும் கால்நடை நலத் துறை ஆகியவை சாா்பில், உலக கால்நடை மருத்துவ தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

புதுச்சேரி கால்நடைத் துறைத் தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்நடை மருத்துவா்கள், மருத்துவ அலுவலா்கள் கலந்து கொண்டு ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள், நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியும், சிகிச்சையளித்தும் ஆலோசனைகள் வழங்கினா்.

இந்தச் சிறப்பு முகாமில் 45 வளா்ப்பு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும், 76 கோழிகளுக்கு ராணிகெட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன. கரோனா பொது முடக்க விதிகளைப் பின்பற்றி, மருத்துவா்கள் கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com