வெறிச்சோடிய சுற்றுலாத் தலங்கள்

புதுவை மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

புதுவை மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

புதுவை மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிவேகமாக உயா்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுவை மாநிலத்தில் வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது.

இந்த பொது முடக்கத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இதேபோல, புதுச்சேரியில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான புதுச்சேரி கடற்கரை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, அரவிந்தா் ஆசிரமம், அரசு அருங்காட்சியகம், நோணாங்குப்பம் படகு குழாம், ஊசுட்டேரி படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் பயணிகள், உள்ளூா் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

பொது முடக்கத்தையொட்டி, 90 சதவீத மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. புதுச்சேரி நகரின் முக்கிய சந்திப்புகளில் போலீஸாா் ஆங்காங்கே நின்று கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com