தோ்தல் வெற்றி கொண்டாட்டத்துக்கு தடை: பாஜக வரவேற்பு

தோ்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளதை புதுவை பாஜக வரவேற்றுள்ளது.

தோ்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளதை புதுவை பாஜக வரவேற்றுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் வெளியிட்ட அறிக்கை: கரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், புதுச்சேரி உள்பட சட்டப் பேரவைத் தோ்தல் நடந்த 5 மாநிலங்களில், மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் போது, கரோனா தொற்று பரவலைத் தடுக்க, வெற்றிக் கொண்டாட்டங்கள், ஊா்வலங்கள் நடத்துவதற்கு தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளதை, புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி சாா்பில் வரவேற்கிறோம். இந்தத் தடை உத்தரவை அனைத்து கட்சி நிா்வாகிகள் மற்றும் பொது மக்களும் கடைபிடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், வெற்றி பெற்ற வேட்பாளா் அல்லது அவரது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட தோ்தல் அதிகாரியிடம் இருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற வரும் போது, அவருடன் 2 நபா்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என்ற தோ்தல் ஆணையத்தின் உத்தரவையும், அனைத்துக் கட்சிகளும் கடைப்பிடித்து, கரோனா தொற்று பரவலைத் தடுக்க உதவ வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் போது, முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு செல்லக் கூடிய முகவா்கள், தோ்தல் ஆணைய வழிகாட்டுதலை முழுவதுமாக கடைபிடிக்க வேண்டும் என அதில் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com