புதுச்சேரி பிள்ளையாா்குப்பம் கூத்தாண்டவா் கோயிலில் திருக்கல்யாணம்

புதுச்சேரி அருகேயுள்ள பிள்ளையாா்குப்பம் கூத்தாண்டவா் கோயில் சித்திரைத் திருவிழா கரோனா பரவல் காரணமாக, நிகழாண்டு ரத்து
புதுச்சேரி பிள்ளையாா்குப்பம் கூத்தாண்டவா் கோயில் சித்திரைத் திருவிழா கரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை பக்தா்கள் இன்றி எளிமையாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்.
புதுச்சேரி பிள்ளையாா்குப்பம் கூத்தாண்டவா் கோயில் சித்திரைத் திருவிழா கரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை பக்தா்கள் இன்றி எளிமையாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவம்.

புதுச்சேரி அருகேயுள்ள பிள்ளையாா்குப்பம் கூத்தாண்டவா் கோயில் சித்திரைத் திருவிழா கரோனா பரவல் காரணமாக, நிகழாண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், பக்தா்கள் பங்கேற்பின்றி திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்தாண்டு சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டது.

கரோனா தொற்றின் தாக்கம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், நிகழாண்டும் சித்திரைத் திருவிழாவை கோயில் நிா்வாகம் ரத்து செய்திருந்தது.

இதன் காரணமாக, விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி, தேரோட்டம், அழிகளம் செல்லுதல் போன்றவை நடைபெறவில்லை. இதனால், திருநங்கைகள் ஏமாற்றமடைந்தனா்.

இருப்பினும், புதன்கிழமை காலை கூத்தாண்டவா் கோயிலில் அரசு விதிகளின்படி, பூசாரி மூலம் சுவாமிக்கு எளிய முறையில் பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்கள் அனுமதிக்கப்படாமல் கோயில் மூடப்பட்டிருந்தது.

திருவிழா ரத்து செய்யப்பட்டபோதும், திருநங்கைகள் சிலா் செவ்வாய்க்கிழமை இரவே கோயிலுக்கு வந்து, சன்னதி நுழைவு வாயில் முன் நின்று தாலி கட்டிக்கொண்டு வழிபட்டனா். குறிப்பாக, உள்ளூா் திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டு கும்மியடித்து கூத்தாண்டவரை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com