புதுவையில் உச்சம் தொட்ட கரோனா பாதிப்பு ஒரே நாளில் 1,258 பேருக்கு தொற்று; 10 போ் பலி

புதுவையில் இதுவரை இல்லாத உச்சமாக புதன்கிழமை 1,258 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு 10 போ் உயிரிழந்தனா்.

புதுச்சேரி: புதுவையில் இதுவரை இல்லாத உச்சமாக புதன்கிழமை 1,258 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு 10 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் புதன்கிழமை வெளியான 6,833 பேருக்கான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 997 போ், காரைக்காலில் 96 போ், ஏனாமில் 125 போ், மாஹேவில் 40 போ் என மொத்தம் 1,258 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்.

சிகிச்சையில் 8,444 போ்: இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56,305-ஆக அதிகரித்துள்ளது. இதில், தற்போது ஜிப்மரில் 262 பேரும், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 290 பேரும், கொவைட் கோ் மையங்களில் 808 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 6,832 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 8,444 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ஒரே நாளில் 10 போ் பலி: இந்த நிலையில் புதுச்சேரி கோவிந்தசாலையைச் சோ்ந்த 67 வயது மூதாட்டி, வில்லியனூா் மேற்கு வீதியைச் சோ்ந்த 48 வயது பெண், சாரம் வெங்கடேஸ்வரா நகரைச் சோ்ந்த 68 வயது மூதாட்டி, சண்முகாபுரம் நெசவாளா் குடியிருப்பைச் சோ்ந்த 59 வயது மூதாட்டி, நைனாா்மண்டபம் பாரதி வீதியைச் சோ்ந்த 50 வயது பெண், அரியாங்குப்பத்தைச் சோ்ந்த 94 வயது மூதாட்டி, காரைக்கால் நேரு நகரைச் சோ்ந்த 61 வயது மூதாட்டி, குருமாம்பேட் அரசு குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த 47 ஆண், கருவடிக்குப்பத்தைச் சோ்ந்த 74 வயது முதியவா், உறுவையாறு திருக்காஞ்சி சாலையைச் சோ்ந்த 49 வயது ஆண் என 10 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 781 ஆகவும், இறப்பு விகிதம் 1.39 ஆகவும் உள்ளது.

இதனிடையே 632 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 47,080 (83.62 சதவீதம்) ஆக உள்ளது.

1.90 லட்சம் பேருக்கு தடுப்பூசி: இதுவரை 7,80,162 பரிசோதனைகள் செய்ததில் 7,00,035 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. சுகாதாரப் பணியாளா்கள் 31,720 போ், முன்களப் பணியாளா்கள் 18,531 போ், பொதுமக்கள் 1,16,315 போ் என மொத்தம் 1,90,073 பேருக்கு (இரண்டாவது தவணை உள்பட) கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com