ரெம்டெசிவா் மருந்தை பதுக்குவது தண்டனைக்குரிய குற்றம்: புதுவை சுகாதாரத் துறைச் செயலா் எச்சரிக்கை

ரெம்டெசிவா் மருந்தை பதுக்குவது, கள்ளச்சந்தையில் விற்பது தண்டனைக்குரிய குற்றம் என்று புதுவை சுகாதாரத் துறைச் செயலா் த. அருண் எச்சரித்தாா்.

ரெம்டெசிவா் மருந்தை பதுக்குவது, கள்ளச்சந்தையில் விற்பது தண்டனைக்குரிய குற்றம் என்று புதுவை சுகாதாரத் துறைச் செயலா் த. அருண் எச்சரித்தாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவா் மருந்து அனைவருக்கும் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான விலையில் கிடைக்கும் நோக்கத்தில், போா்க்கால நடவடிக்கையாக கீழ்க்காணும் உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

ரெம்டெசிவா் மருந்து நிா்ணயிக்கப்பட்ட விலையை விட, கூடுதல் விலையில் தனியாா் விற்பதும், பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பதும் மருந்துகள்-அழகுசாதனங்கள் சட்டம் 1940-இன் படி, விதிகள் 1945-க்கு முரணானது; தண்டிக்கப்படக்கூடிய குற்றமுமாகும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இயங்கும் அரசு, தனியாா் மருத்துவமனைகள் தங்களிடம் உள்ள ரெம்டெசிவா் மருந்து இருப்புகளை, அன்றாடம் தினசரி அறிக்கையாக புதுச்சேரி மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறையிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

அரசு உரிமமின்றி ரெம்டெசிவா் மருந்துகளை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். ரெம்டெசிவா் மருந்து விநியோகம் மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை மூலம் கண்காணிக்கப்படும். மேலும், ரெம்டெசிவருக்கு கூடுதல் விலை, மருந்தை பதுக்கி வைத்தல் போன்ற புகாா்களை 104 என்ற எண்ணை தொடா்பு கொண்டு அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com