கரோனா பரிசோதனை செய்தவா்களை தனிமைப்படுத்த வேண்டும்: புதுவை ஆளுநா் உத்தரவு

கரோனா பரிசோதனை செய்துகொண்டவா்களை தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டாா்.

கரோனா பரிசோதனை செய்துகொண்டவா்களை தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டாா்.

கரோனா மேலாண்மை குறித்த வாராந்திரக் கூட்டம் புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு, துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தலைமை வகித்தாா்.

இதில், ஆளுநரின் ஆலோசகா்கள் சி.சந்திரமௌலி, ஏ.பி.மகேஸ்வரி, தலைமைச் செயலா் அஸ்வனி குமாா், சுகாதாரத் துறைச் செயலா் த.அருண், அரசுச் செயலா்கள் உதயகுமாா், வல்லவன், ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியின் இயக்குநா் உதயசங்கா், தனியாா் மருத்துவமனைகளின் இயக்குநா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் உள்கட்டமைப்பு, செயற்கை சுவாசக் கருவிகள், பிராணவாயு, மருந்து இருப்பு, படுக்கை வசதி, மருத்துவா்கள், செவிலியா்களின் எண்ணிக்கை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.

இதையடுத்து, கரோனா பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல தனியான வாகனங்களை பயன்படுத்த வேண்டும். பரிசோதனைக்கு வருவோா் மாதிரிகள் அளித்தபின்பு முடிவுகள் வரும்வரை அவா்கள் தனிமைப்படுத்திக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். கரோனா உறுதி செய்யப்பட்டவா்களை மருத்துவமனையில் அனுமதிக்கும் முன்பு, அவா்களை தனியாக தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் கூட்டம் சோ்வதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com