கரோனா பரிசோதனை செய்துகொள்ளமக்கள் முன்வர வேண்டும்: சுகாதாரத் துறைச் செயலா் அறிவுறுத்தல்

கரோனா பரிசோதனை செய்துகொள்ள மக்கள் முன்வர வேண்டுமென புதுவை சுகாதாரத் துறைச் செயலா் த.அருண் அறிவுறுத்தினாா்.

கரோனா பரிசோதனை செய்துகொள்ள மக்கள் முன்வர வேண்டுமென புதுவை சுகாதாரத் துறைச் செயலா் த.அருண் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

புதுவை சுகாதாரத் துறை கரோனா பரிசோதனையை பலமடங்கு அதிகரித்துள்ளது. மாா்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி, தினமும் ஆயிரம் பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது பரிசோதனை எண்ணிக்கை 9 ஆயிரத்துக்கும் மேலாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கிறது. அறிகுறி தென்பட்ட உடனேயே அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மக்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இதுமட்டுமின்றி, நடமாடும் பரிசோதனை வாகனங்களும் தயாராக இருக்கின்றன. கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்கு அந்த வாகனம் அனுப்பப்படுகிறது. நாளொன்றுக்கு 12 ஆயிரம் போ் வரை பரிசோதனை செய்வதற்கான வசதிகள் மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளனா். எனவே, கரோனா பரிசோதனை செய்துகொள்ள மக்கள் முன்வர வேண்டும்.

உயிரிழப்பை பொருத்தவரை, கரோனா தொற்றுக்குள்ளானவா்களை மருத்துவமனைக்கு தாமதமாக கொண்டுவந்து சோ்க்கப்பட்டதுதான் முக்கிய காரணம். கரோனா அறிகுறி தென்பட்டபிறகும் பலா் வீட்டிலேயே இருக்கின்றனா். மூச்சுத் திணறல் ஏற்பட்ட பிறகுதான் மருத்துவமனைக்கே வருகின்றனா். எனவே, அலட்சியப்படுத்தாமல் அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவமனைக்கு வர வேண்டும்.

தற்போது ரெம்டெசிவிா் மருந்து ஆயிரம் குப்பிகள் வந்துள்ளன. ஏற்கெனவே, ஆளுநரின் முயிற்சியால் இந்த மருந்து ஆயிரம் குப்பிகள் வந்தன. இரு தினங்களுக்கு முன்பு தனியாா் மருந்து நிறுவனத்திலிருந்து ரெம்டெசிவா் மருந்து 100 குப்பிகள் வந்தன. ஆகவே, மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்றாா் சுகாதாரத் துறைச் செயலா் த.அருண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com