புதுவைக்கு கரோனா மருந்துகள் கிடைக்க நடவடிக்கை: பிரதமருக்கு புதுவை எம்.பி. கோரிக்கை

புதுவைக்கு கரோனா சிகிச்சைக்குத் தேவையான டோசிலிஸூமாப், ரெம்டெசிவிா் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமருக்கு புதுவை எம்.பி. வெ.வைத்திலிங்கம் கோரிக்கை விடுத்தாா்.

புதுவைக்கு கரோனா சிகிச்சைக்குத் தேவையான டோசிலிஸூமாப், ரெம்டெசிவிா் மருந்துகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமருக்கு புதுவை எம்.பி. வெ.வைத்திலிங்கம் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷவா்தன் ஆகியோருக்கு புதுவை எம்.பி. வெ.வைத்திலிங்கம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

புதுவை மாநிலத்துக்கு 3 ஆயிரம் ரெம்டெசிவிா் மருந்து குப்பிகள் கிடைக்க ஒப்புதல் அளித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

புதுவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 8,500-ஐ கடந்துள்ளது. மேலும், நாள்தோறும் சுமாா் 10-க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டு பலியாகி வருகின்றனா். பிராணவாயு, செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டா்) தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவா்களுக்கு தேவைப்படும் டோசிலிஸுமாப் மருந்து மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடா்பான உத்தரவு வெளியாகியுள்ளது. இந்த ஒதுக்கீட்டிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் விடுபட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பிரதமா் மோடி தலையிட்டு 200 டோசிலிஸுமாப் மருந்து குப்பிகளும், மீதமுள்ள 7 ஆயிரம் ரெம்டெசிவா் மருந்து குப்பிகளும் புதுவைக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுவையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், புதுவையில் உள்ள ஜிப்மரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான படுக்கை வசதிகளையும் அதிகப்படுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com