புதுச்சேரியில் தற்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை: கல்வி அமைச்சர் நமச்சிவாயம்

புதுவை மாநிலத்தில் தற்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மாநிலத்தில் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்.
புதுச்சேரியில் மாநிலத்தில் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்.

புதுவை மாநிலத்தில் தற்போதைக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி தலைமை செயலகத்தில், புதுவை மாநிலத்தில் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், கல்வித்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கல்வித்துறை செயலர் வல்லவன், சுகாதாரத்துறை செயலர் அருண், கல்வித்துறை, சுகாதாரத்துறை இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு பின் கல்வியமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளரிடம் கூறியதாவது:
புதுவை மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பது தொடர்பாக சுகாதாரத்துறை, கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. புதுவை மாநிலத்தில் கரோனா மூன்றாம் அலை எப்போது தொடங்கும் என்ற நிலை தெரியாத சூழலில், தற்போது சில குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

புதுவையில் மொத்தம் உள்ள 10 லட்சம் பேரில், 5.60 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என முடிவு செய்து கல்வி மற்றும் சுகாதாரத் துறை மூலம் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் தொடங்க உள்ளது.

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு பிறகு ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் தடுப்புசி செலுத்திய பிறகு, பள்ளி கல்லூரிகள் தொடங்குவது தொடர்பாக ஆளுநர் மற்றும் முதல்வருடன் பேசி உரிய முடிவு தெரிவிக்கப்படும். இதனால் தற்போதைக்கு பள்ளி கல்லூரிகள் தொடங்க படாது. முழுமையான தடுப்பூசி செலுத்திய பிறகே பள்ளிகள் தொடங்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com