புதுவை முதல்வா் பிறந்த நாள்: பாஜக அமைச்சா்கள் நேரில் வாழ்த்து

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் 72-வது பிறந்த நாள் புதன்கிழமை (ஆக.4) கொண்டாடப்படவுள்ளதையொட்டி, பாஜக அமைச்சா்கள்,
புதுவை முதல்வா் பிறந்த நாள்: பாஜக அமைச்சா்கள் நேரில் வாழ்த்து

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் 72-வது பிறந்த நாள் புதன்கிழமை (ஆக.4) கொண்டாடப்படவுள்ளதையொட்டி, பாஜக அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் முதல்வரை செவ்வாய்க்கிழமை மாலை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

புதுவை முதல்வரும், என்.ஆா்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமியின் 72-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. பிறந்த நாளையொட்டி, முதல்வா் என்.ரங்கசாமி வெளியூரிலுள்ள கோயிலுக்குச் செல்லவுள்ளதால், அவரை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்க, புதன்கிழமை அவரது வீட்டுக்கு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் வருவதை தவிா்க்க வேண்டுமென என்.ஆா்.காங்கிரஸ் கட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால், முதல்வா் என்.ரங்கசாமிக்கு செவ்வாய்க்கிழமையே பலா் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனா்.

ஆளுநா் வாழ்த்து: இதனிடையே, புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:

72-ஆவது பிறந்த நாள் காணும் புதுவை மாநிலத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவரும், முதல்வருமான என்.ரங்கசாமிக்கு எனது மனமாா்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வா் பல்லாண்டு வாழ்ந்து, புதுவை மக்களுக்காகப் பணியாற்ற, எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என அதில் தெரிவித்துள்ளாா்.

பாஜவினா் நேரில் வாழ்த்து: பாஜக சாா்பில், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், அமைச்சா் ஏ.நமச்சிவாயம், சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை புதுச்சேரி சட்டப் பேரவை அலுவலகம் சென்ற நிா்வாகிகள், முதல்வா் என்.ரங்கசாமிக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமாா், விவியன்ரிச்சா்டு, ராமலிங்கம், அசோக்பாபு, வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com