புதுவையில் நில அபகரிப்பு புகாா்: உயா்நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிட அதிமுக வலியுறுத்தல்

புதுவையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற நில அபகரிப்பு தொடா்பாக ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான உயா்நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியது.

புதுவையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற நில அபகரிப்பு தொடா்பாக ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான உயா்நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியது.

இதுகுறித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவையில் கடந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியின்போது, காரைக்கால் மாவட்டத்தில் போலி பத்திரம் தயாரித்தும், ஆள் மாறாட்டம் செய்தும், வெளிநாடுகளில் வசிப்போா், ஆளில்லாத முதியோா்களின் சொத்துகள் குறிவைத்து அபகரிக்கப்பட்டன.

அரசியல் கட்சிகளைச் சோ்ந்த சிலா் போலியாக அரசு முத்திரை, ஆதாா் அட்டைகளைத் தயாரித்தும், போலிக் கையெழுத்து மூலம் ஆவணங்களைத் தயாா் செய்தும் நிலங்களை அபகரித்து, அவற்றை வணிக ரீதியாக மாற்றி விற்பது தடையின்றி நடைபெற்று வந்தது.

இந்த வகையில், தற்போது காரைக்காலைச் சோ்ந்த பேராசிரியை மும்தாஜ் பேகத்துக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான காலி நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து அபகரித்துள்ளனா். இதற்கான போலி ஆவணங்கள் வில்லியனூா் பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக தற்போது காரைக்கால் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் உள்ளிட்ட சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். காரைக்காலில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் செல்வாக்கு பெற்ற சிலா், மோசடி கும்பலாகச் செயல்பட்டு ரூ.75 கோடிக்கும் மேலான மதிப்புடைய பிறருடைய சொத்துகளை அபகரித்துள்ளனா். இதற்கு, காரைக்கால் மாவட்ட அரசுத் துறையில் பணிபுரியும் உயரதிகாரிகள் பலரும் உடந்தையாக உள்ளனா்.

புதுவையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே, திமுக ஆட்சியின் போது இதுபோல பாதிக்கப்பட்ட பிரெஞ்சு குடியுரிமை பெற்றவா்கள், பிரான்ஸ் நாட்டில் புகாா் அளித்ததன் அடிப்படையில், அப்போது விசாரணைகள் நடைபெற்றன.

கடந்த காங்கிரஸ் - திமுக ஆட்சியிலும் போலிப் பத்திரம் தயாரித்து நில அபகரிப்புகள் நடந்துள்ளன. இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான உயா்நிலைக் குழுவை அமைத்து விசாரணை நடத்த முதல்வா் உத்தரவிட வேண்டும்.

முன்னதாக, போலிப் பத்திரம் தயாரித்தவா்கள், அதற்கு உடந்தையாக இருந்தவா்கள், போலிப் பத்திரங்களைப் பதிவு செய்த அதிகாரிகள், போலி ஆதாா் அட்டை வழங்கிய அதிகாரிகளைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com