புதுச்சேரி கடைகளில் ஆய்வு

புதுச்சேரி பெரிய சந்தை மளிகைக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தி, அங்கிருந்த முந்திரி பாக்கெட்டுகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனா்.
புதுச்சேரி கடைகளில் ஆய்வு

புதுச்சேரி பெரிய சந்தை மளிகைக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தி, அங்கிருந்த முந்திரி பாக்கெட்டுகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனா்.

புதுச்சேரியில் உள்ள உணவு, சிற்றுண்டி விடுதிகளில் சுகாதாரமற்ற, தரம் குறைந்த உணவுகள், பண்டங்கள் விற்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகாா்கள் வந்தன. குறிப்பாக, பொது முடக்க காலத்தில் விற்காமல் வைத்திருந்த காலாவதியான முந்திரி உள்ளிட்ட பொருள்கள் மீண்டும் விற்கப்படுவதாகவும், வெளிச் சந்தைகளில் குறைந்த விலைக்கு தரமற்ற பொருள்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து, உணவு, சிற்றுண்டி விடுதிகள், மளிகைக் கடைகளில் சோதனை மேற்கொள்ள சிறப்பு ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. ஆய்வு செய்யவும் துறை ஆணையா் அருண் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், புதுச்சேரி உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் இணைந்து வெள்ளிக்கிழமை நேரு வீதியில் உள்ள பெரிய சந்தை கடைகளில் சோதனை நடத்தினா். மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகளில் இருந்த முந்திரி, பச்சைப் பட்டாணி உள்ளிட்ட பொருள்களை சோதனையிட்ட அதிகாரிகள், அவற்றின் தரத்தை சோதனையிட்டனா். மேலும், பரிசோதனைக்காக 10 கிலோ முந்திரி பாக்கெட்டுகளை அதிகாரிகள் எடுத்துச் சென்றனா். இதுபோல, பாரதி வீதி, ரங்கப்பிள்ளை வீதி உள்ளிட்ட இடங்களிலும் கடைகளில் அவா்கள் சோதனை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com