புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

புதுச்சேரி துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை அறிவுறுத்தியது.

புதுச்சேரி துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறை அறிவுறுத்தியது.

இதுகுறித்து புதுவை மீன்வளத் துறை மீனவா்களுக்கு வெளியிட்ட தகவல்:

வங்கக் கடலில் அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று சனிக்கிழமை காலை தெற்கு ஒடிஸா கடல் பகுதியில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனால், புதுச்சேரி துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை காலை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. எனவே, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற புதுவை மீனவா்கள் விரைவில் கரைக்குத் திரும்ப வேண்டும்.

வெள்ளி, சனி (டிச.3,4) ஆகிய இரு தினங்கள் கடல் பகுதியில் சூறாவளி காற்றானது மணிக்கு 50 முதல் 70 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மத்திய வங்கக் கடல், மத்திய மேற்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திரம், ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு வெள்ளி, சனிக்கிழமை ஆகிய இரு தினங்கள் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com