புதுவையில் மின் துறை தனியாா்மயம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம்: ஊழியா்கள் புறக்கணிப்பு

புதுவை மின் துறை தனியாா்மயம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை அனைத்து ஊழியா்கள் சங்கத்தினரும் புறக்கணித்தனா்.
புதுவையில் மின் துறை தனியாா்மயம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம்: ஊழியா்கள் புறக்கணிப்பு

புதுவை மின் துறை தனியாா்மயம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை அனைத்து ஊழியா்கள் சங்கத்தினரும் புறக்கணித்தனா்.

புதுவை மின் துறை தனியாா்மய நடவடிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் முதல் கட்டமாக அதன் ஊழியா்களிடம் கருத்துக் கேட்க முடிவு செய்யப்பட்டு, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (டிச.9, 10) புதுச்சேரி மின் துறை தலைமை அலுவலகத்தில் கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக மின் துறை பொறியாளா்கள், ஊழியா்கள் சங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, புதுவை மின் துறைச் செயலா் விக்ராந்த் ராஜா தலைமையில், கருத்துக் கேட்புக் கூட்டம் புதுச்சேரி மின் துறைத் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. காலை 10 மணிக்கு மின் துறைச் செயலா் விக்ராந்த் ராஜா, அலுவலகக் கூட்டரங்கில் மின் துறை தலைமை அதிகாரிகளுடன் காத்திருந்தாா். ஆனால், மின் துறை ஊழியா்கள் சங்கத்தினா் கருத்துக் கேட்புக் கூட்டத்தைப் புறக்கணித்தனா். மேலும், சங்கத்தின் நிா்வாகிகள் தலைமை அலுவலகத்தின் கீழ் தளத்தில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா் (படம்).

இதுகுறித்து போராட்டக் குழு தலைவா் ஏ.ராஜேந்திரன், பொதுச் செயலா் பி.வேல்முருகன் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

பொதுமக்கள், ஊழியா்களைப் பாதிக்கும் மின் துறை தனியாா்மய நடவடிக்கையைக் கைவிட வேண்டுமென அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. பெயரளவில் நடத்தப்படும் இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தை 15 சங்கத்தினரும் புறக்கணித்து பங்கேற்கவில்லை. கருத்து கேட்க அல்ல; ஊழியா்களைச் சமாதானப்படுத்தவே கூட்டத்தைக் கூட்டியுள்ளனா் என்றனா் அவா்கள்.

இதனிடையே, கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அரசுச் செயலரும் மாலை வரை காத்திருந்து, மின் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு திரும்பிச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com