புதுச்சேரியில் பெண்கள் ஓட்டுநா் உரிமம் பெற சிறப்பு ஏற்பாடு

 புதுச்சேரியில் பெண்கள் ஓட்டுநா், பழகுநா் உரிமம் பெற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 புதுச்சேரியில் பெண்கள் ஓட்டுநா், பழகுநா் உரிமம் பெற சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுவை போக்குவரத்து ஆணையா் ஏ.எஸ்.சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பணிக்குச் செல்லும் பெண்கள், குடும்பத் தலைவிகள் அலுவலக நாள்களில் ஓட்டுநா் உரிமம் பெற சிரமப்படுகின்றனா். இதைக் கருத்தில் கொண்டு, அவா்கள் ஓட்டுநா், பழகுநா், கூடுதல் ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கு இணையதள விண்ணப்பச் செயல்பாட்டில் நேர முன்பதிவு செய்யும் வசதியை போக்குவரத்துத் துறை அண்மையில் தொடங்கியது. இதன் மூலம் பெண்கள் தாங்களே நேரத்தைத் தோ்வு செய்து கொள்ளலாம்.

இந்தச் சிறப்பு ஏற்பாட்டின் கீழ், புதுச்சேரி பிராந்தியத்தில் வருகிற 11-ஆம் தேதி காலை 11 மணியளவில் நூறடி சாலையல் உள்ள போக்குவரத்துத் துறை வளாகத்தில் இரு சக்கர, நான்கு சக்கர வாகன பழகுநா் உரிமம் பெறுவதற்கான தோ்வு, இரு சக்கர வாகன ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கான தோ்வு நடைபெறுகிறது. நான்கு சக்கர வாகன ஓட்டுநா் உரிமத் தோ்வு போக்குவரத்து சரக்கு வாகன முனையத்தில் நடைபெறும்.

இந்தத் திட்டம் அடுத்த கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.

பெண்கள் ஓட்டுநா், பழகுநா், கூடுதல் ஓட்டுநா் உரிமங்களைப் பெற ட்ற்ற்ல்://ல்ஹழ்ண்ஸ்ஹட்ஹய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com