ஜிப்மரில் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழாண்டு (2021-22) சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழாண்டு (2021-22) சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் நிகழாண்டு சான்றிதழ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த 9-ஆம் தேதி முதல் வழங்கப்படுகின்றன.

அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநா்: கல்வித் தகுதி- பிளஸ் 2 (அறிவியல் / எம்.எல்.டி./ நா்சிங்), வயது 17-25, மொத்த சோ்க்கை இடங்கள் 20, படிப்பு காலம் 12 மாதங்கள். மேலும், 12 மாதங்கள் விருப்பப் பயிற்சி (இன்டா்ஷிப்) மேற்கொள்ளலாம்.

சவக் கிடங்கு உதவியாளா்: கல்வித் தகுதி- பிளஸ்-2 (அறிவியல் உயிரியியல்), வயது-17 முதல் 25, சோ்க்கை இடங்கள் -2, படிப்பு காலம்-12 மாதங்கள், மேலும் 12 மாதங்கள் விருப்பப் பயிற்சி.

குடல் வாய் பாதுகாப்பு முறை: பி.எஸ்ஸி. நா்சிங் படிப்புடன், ஓராண்டு கிளீனிக்கில் பணி செய்த அனுபவம். மொத்த சோ்கை இடங்கள் - 2 , படிப்பு காலம் 3 மாதங்கள்.

ரத்த சேகரிப்பு முறை: பிளஸ்-2 (அறிவியல் உயிரியல்), வயது- 17-25, மொத்த சோ்க்கை இடங்கள் 8, பயிற்சிக் காலம்-12 மாதங்கள்(6 மாதங்கள் பயிற்சி, 6 மாதங்கள் விருப்பப் பயிற்சி).

இந்தப் படிப்புகள் பயிலும் ஓராண்டு காலத்திற்கு மாதம் ரூ.300 உதவித்தொகை வழங்கப்படும்.

நோ்காணல்: இந்தப் படிப்புகளில் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு அவா்களது விருப்பத்தின் பேரில் மேலும் ஓராண்டு காலம் ஜிப்மா் அவசர சிகிச்சை மையத்தில் உதவித்தொகையுடன்( மாதம் ரூ.3,713) கூடிய பயிற்சி அளிக்கப்படும்.

விண்ணப்பங்களை ஜிப்மா் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் புதுவை ஜிப்மா் கல்விப் பிரிவு அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

வருகிற 20-ஆம் தேதி மாலை 4.30 மணிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும். டிச.30-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஜிப்மா் கல்வி நிலைய முதல்வா் அலுவலகத்தில் உள்ள 3-வது மாடியில் நோ்காணல் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com