புதுச்சேரியில் கரை ஒதுங்கிய திமிங்கிலம்

புதுச்சேரியில் 15 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத திமிங்கலம், தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது.
புதுச்சேரியில் கரை ஒதுங்கிய திமிங்கிலம்
புதுச்சேரியில் கரை ஒதுங்கிய திமிங்கிலம்

புதுச்சேரியில் 15 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத திமிங்கலம், தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது.

புதுச்சேரி அருகே தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே கடற்கரையோரம் ராட்சத திமிங்கலம் ஒன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

அதனை அப்பகுதி மீனவர்கள், பொது மக்கள் ஆர்வமாக பார்வையிட்டனர். இது தொடர்பாக மீனவர்கள் கூறுகையில், வீராம்பட்டினம் மீனவர் சரவணன் என்பவர் மீன் பிடிக்கச் சென்றபோது வலையில் இந்த அரிய வகை திமிங்கலம் சிக்கியது.

இறந்த நிலையில் இருந்ததால் கரைக்கு கொண்டுவரப்பட்டது. 15 மீட்டர் நீளமும் 2.5 டன் எடையும் கொண்டுள்ளது. திமிங்கிலம் வகையைச் சேர்ந்தது.
திமிங்கலச் சுறா அல்லது அம்மணி உழுவை (Whale Shark) என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றினும் மிகப்பெரிய வகை ஆகும். 

இந்தச்சுறாமீன் வெப்ப மண்டலக் கடல்களில் வாழ்கின்றன. நிலநடுக்கோட்டிலிருந்து சுமார் ±30° பகுதிகளில்  சுமார் 700 மீட்டர் ஆழத்தில் இவைகள் வாழ்கின்றன.

இந்தச்சுறா மீன்கள் சுமார் 18 மீட்டர் (60 அடிகள்) நீளமும், சுமார் 14 மெட்ரிக் டன் எடையும் கொண்டவை. இவை தனியாகவே வாழ்கின்றன. ஒரு நாளைக்கு 2.6 டன் எடை உணவு உட்கொள்ளும்.

சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மீன் இனம் ஆகும். 
இந்த திமிங்கலம் கடல் பகுதியில் கப்பல் போன்றவற்றில் அடிபட்டு இறந்த நிலையில் ஒதுங்கி இருக்கலாம் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com