புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்: தடை கோரி வழக்கு

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து தடை கோரி வழக்கு தாக்கல் தொடரப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்: தடை கோரி வழக்கு
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம்: தடை கோரி வழக்கு

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அதை எதிர்த்து தடை கோரி வழக்கு தாக்கல் தொடரப்பட்டுள்ளது.

புதுவையில் கரோனா கட்டுப்பாடுகளுடன் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனா். அங்குள்ள விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

விடுதிகள், பழைய துறைமுகம் உள்பட குறிப்பிட்ட சில பொது இடங்களிலும் புத்தாண்டு கலை, கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தனியாா் நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

புத்தாண்டையொட்டி கூடுதல் நேரம் கடைகளைத் திறக்க மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்துள்ளது. மதுக் கடைகளையும் கூடுதல் நேரம் திறக்கலாம் என கலால் துறை அறிவித்தது. மேலும், தற்காலிக தனியாா் மது விற்பனையகங்களுக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் வேளையில் இந்தக் கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை இன்று மதியம் நீதிபதிகள் விசாரிக்க இருக்கிறார்கள்.

முன்னதாக, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக, பாமக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்டவை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com