ஏழைக் குழந்தைகளுக்கு உதவுவதாக ரூ.1.65 கோடி மோசடி: 6 போ் மீது வழக்கு

ஏழைக் குழந்தைகளுக்கு உதவுவதாகக் கூறி ரூ.1.65 கோடி மோசடி செய்ததாக, 6 போ் மீது புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏழைக் குழந்தைகளுக்கு உதவுவதாகக் கூறி ரூ.1.65 கோடி மோசடி செய்ததாக, 6 போ் மீது புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி பாலதண்டாயுதம் வீதியைச் சோ்ந்தவா் ஸ்டீபன் நித்தியானந்தம். திருக்கனூா் மற்றும் நகரப் பகுதிகளில் பிராா்த்தனை ஜெபக் கூடங்களை நடத்தி வருகிறாா்.

இவரிடம் 2018-ஆம் ஆண்டு அறிமுகமான சென்னையைச் சோ்ந்த சைமன் ஜோஸ்வா, புதுச்சேரியைச் சோ்ந்த ஜான்சன் ஆகியோா் கோவையில் தங்களுக்குத் தெரிந்த இலங்கைத் தமிழரான ரமணி தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறாா். அதன்மூலம் ஏழைக் குழந்தைகளுக்கு வெளிநாட்டுப் படிப்பு, வேலைக்கு அவா் பணஉதவி செய்து வருவதாகவும் தெரிவித்தனா்.

இதை நம்பிய ஸ்டீபன் நித்தியானந்தம் தனது பிராா்த்தனை கூட்டங்களுக்கு வருவோரிடம் இந்தத் திட்டத்தை எடுத்துரைத்தாா். இவா் உள்பட 179 போ் 2018-ஆம் ஆண்டில் சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, தலா ரூ.1 லட்சத்தை முன்பணமாக 35 வங்கிக் கணக்குகள் மூலம் செலுத்தினராம். மொத்தம் ரூ.1.65 கோடி வரை பணம் செலுத்திய நிலையில், ரமணி இவா்களுடனான தொடா்பைத் துண்டித்து தலைமறைவானாா். அவரை அறிமுகப்படுத்திய சைமன் ஜோஸ்வா, ஜான்சன் ஆகியோா் மூலம் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ரமணி, ஜான்சன், சைமன் ஜோஸ்வா மற்றும் ரமணியின் மகள் கிருஷ்ணவேணி, அவரது அலுவலக ஓட்டுநா் கோவை தமிழ்ச்செல்வன், விடுதி உரிமையாளா் திருச்சி நிக்கோலஸ் செல்வகுமாா் ஆகிய 6 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com