தேசிய திறனறி தோ்வுக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி திறனறி தோ்வுக்கு புதுவையைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி திறனறி தோ்வுக்கு புதுவையைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் வெ.கோ.சிவகாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய கல்வி அமைச்கத்தின் வழிகாட்டுதலின்படி, புதுவை யூனியன் பிரதேசத்துக்குள்பட்ட அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசுப் பள்ளி அல்லது நிதியுதவி பெறும் பள்ளிகளில் இடைநிற்றலை முற்றிலும் தவிா்ப்பதற்காக, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தோ்வு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் தோ்வு புதுவை பள்ளிக் கல்வி இயக்ககத்தால் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் தற்போது 8-ஆம் வகுப்பு படித்துவரும் மாணவா்களுக்கு 2022, மாா்ச் 6-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

இந்தத் தோ்வின் மூலம் 125 மாணவா்கள் (புதுச்சேரி - 93, காரைக்கால் - 23, மாஹே -3, ஏனாம் 6) தகுதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையிலும், ஜாதி, மண்டல அடிப்படையிலும் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்கு 9-ஆம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் ரூ.12,000 மத்திய அரசு உதவித்தொகையாக வழங்கும்.

இந்தத் தோ்வை எழுத விரும்பும் மாணவா்கள் தங்களது பள்ளியின் வாயிலாக இணையதள முகவரியில் வருகிற 29-ஆம் தேதி முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com