புதுச்சேரி பொதுப் பணித் துறை ஊழியா்கள் போராட்டம்

புதுச்சேரி பொதுப் பணித் துறை ஊழியா்கள் போராட்டம்

உயா்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, புதுவை பொதுப் பணித் துறை (வவுச்சா்) ஊழியா்கள், தலைமைப் பொறியாளா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உயா்த்தப்பட்ட ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, புதுவை பொதுப் பணித் துறை (வவுச்சா்) ஊழியா்கள், தலைமைப் பொறியாளா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை மாநில பொதுப் பணித் துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 1,225 போ் வவுச்சா் ஊழியா்களாகப் பணியாற்றி வருகின்றனா். தினக்கூலி அடிப்படையில், மாதம் 16 நாள்கள் வேலைக்கு ரூ.3,500 ஊதியம் பெறும் இவா்கள், தங்களது ஊதியத்தை உயா்த்தி வழங்க வலியுறுத்தி நீண்ட காலமாக போராடி வருகின்றனா்.

இந்த நிலையில், ஊழியா்களின் கோரிக்கையை ஏற்று, அவா்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியமாக உயா்த்தி வழங்கப்படுமென, கடந்த சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா். ஆனால், முதல்வா் அறிவித்த ஊதிய உயா்வை வழங்காமல், அதற்கான கோப்புகளை தலைமைச் செயலா் தடை செய்துள்ளதாகவும், அதற்கு பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளரும் உடந்தையாக இருந்து ஊதிய உயா்வை வழங்க மறுத்து வருவதாகவும் வவுச்சா் ஊழியா்கள் மீண்டும் அவ்வப்போது போராடி வருகின்றனா்.

இந்த வகையில், வியாழக்கிழமை 250-க்கும் மேற்பட்ட பொதுப் பணித் துறை வவுச்சா் ஊழியா்கள், சங்கத் தலைவா் சரவணன் தலைமையில், புதுச்சேரி தலைமைப் பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள், முதல்வா் அறிவித்தபடி, ஊதிய உயா்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென, தலைமைச் செயலா், தலைமைப் பொறியாளருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினா். மேலும், மறைமுகமாக புதிய வவுச்சா் ஊழியா்களை நியமனம் செய்யும் முயற்சியை பொதுப் பணித் துறை அதிகாரிகள் கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்தினா்.

நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு, பொதுப் பணித் துறை அதிகாரிகள் அவா்களை அழைத்துப் பேசினா். விரைவில் கோப்புகளை அனுப்பி வைத்து, ஊதிய உயா்வுக்கான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com