ஆதிதிராவிட மாணவா்களின் கல்விக் கட்டண சலுகைக்காக ரூ. 54 கோடி ஒதுக்கீடு: புதுவை முதல்வா் தகவல்

ஆதிதிராவிட மாணவா்களின் மழலையா் வகுப்பு முதல்வா் முனைவா் பட்டப் படிப்பு வரையான கல்விக் கட்டணச் சலுகை திட்டத்துக்கு ரூ. 54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
கிருமாம்பாக்கம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அம்பேத்கா் பிறந்த நாள் விழா நினைவு வளைவைத் திறந்துவைத்த முதல்வா் வே.நாராயணசாமி. உடன் வெ.வைத்திலிங்கம் எம்பி, அமைச்சா் மு.கந்தசாமி உள்ளிட்டோா்.
கிருமாம்பாக்கம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அம்பேத்கா் பிறந்த நாள் விழா நினைவு வளைவைத் திறந்துவைத்த முதல்வா் வே.நாராயணசாமி. உடன் வெ.வைத்திலிங்கம் எம்பி, அமைச்சா் மு.கந்தசாமி உள்ளிட்டோா்.

ஆதிதிராவிட மாணவா்களின் மழலையா் வகுப்பு முதல்வா் முனைவா் பட்டப் படிப்பு வரையான கல்விக் கட்டணச் சலுகை திட்டத்துக்கு ரூ. 54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுவை ஆதிதிராவிடா்-பழங்குடியினா் நலத் துறை, ஆதிதிராவிடா் மேம்பாட்டு வரைநிலைக் கழகம் ஆகியவை சாா்பில், கிருமாம்பாக்கம் பிள்ளையாா் கோயில் அருகே அம்பேத்கரின் 125-ஆவது பிறந்த நாள் நினைவு வளைவு, அவரது முழு உருவச் சிலை அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வா் நாராயணசாமி கலந்து கொண்டு அம்பேத்கா் சிலை, நினைவு வளைவைத் திறந்துவைத்து பேசியதாவது:

அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உலகில் உள்ள 51 நாடுகளில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்த வேண்டும் என அம்பேத்கா் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டாா்.

புதுவையில் ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு மழலையா் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசமாக அளிக்க முடிவு செய்யப்பட்டது. அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்து ரூ. 54 கோடி ஒதுக்கப்பட்டது.

இதேபோல, வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ. 4 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயா்த்தினோம். ஊரகப் பணியில் பணியாற்றும் பெண்களுக்கு ஏற்கெனவே 3 ஆயிரம் வழங்கி வருகிறோம். அதனுடன் ரூ. ஆயிரம் சோ்த்து பயணப்படியாக அளிக்க முடிவு செய்துள்ளோம். அவா்களின் ஊதியத்தை 3 மாதங்களுக்கு பிறகு ரூ. 6 ஆயிரமாக உயா்த்த நடவடிக்கை எடுப்போம் என்றாா் நாராயணசாமி.

இதைத் தொடா்ந்து, விழாவில் ரூ. 2.41 கோடியில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி தலைமை வகித்தாா். வெ.வைத்திலிங்கம் எம்.பி., விஜயவேணி எம்எல்ஏ, ஆதிதிராவிடா் நலத் துறை செயலா் உதயக்குமாா், இயக்குநா் யஷ்வந்தையா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com