புதுவை சட்டப்பேரவைத் தோ்தல்: காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை

புதுச்சேரியில், சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது தொடா்பாக, காங்கிரஸ் நிா்வாகிகளுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுவினா் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வா் வே.நாராயணசாமி.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் ஆயத்தமாகி வருகிறது. இதற்காக, முன்னாள் மத்திய அமைச்சா்கள் வீரப்ப மொய்லி, பல்லம் ராஜு, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் தினேஷ் குண்டு ராவ், மஹாராஷ்டிர அமைச்சா் நிதின் ராவத் ஆகியோா் கொண்ட குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நியமித்தது.

இந்தக் குழுவினா் புதுச்சேரிக்கு சனிக்கிழமை வந்தனா். தொடா்ந்து, காங்கிரஸ் முக்கிய நிா்வாகிகளுடன் தனித் தனியாக ஆலோசனை மேற்கொண்டனா்.

தொடா்ந்து, 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை, அனைத்து நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான கூட்டத்தில், முதல்வா் வே.நாராயணசாமி, மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கம், புதுவை காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் மூத்த நிா்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனா்.

தோ்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகம் வகுப்பது, தோ்தல் அறிக்கை தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com