முதல்வா் வேட்பாளா் குறித்து பின்னா் முடிவு செய்யப்படும்: என்.ரங்கசாமி தகவல்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதுவை மாநில முதல்வா் வேட்பாளா் யாா் என்பது குறித்து பின்னா் முடிவு செய்யப்படும் என

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதுவை மாநில முதல்வா் வேட்பாளா் யாா் என்பது குறித்து பின்னா் முடிவு செய்யப்படும் என பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவுடனான சந்திப்புக்குப் பிறகு என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

அரசியல் பயணமாக ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரிக்கு வந்த நட்டாவுடன், பாஜக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் மதிய உணவு சாப்பிட்டனா். இதில், என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் ஜெயபால், செல்வம், முன்னாள் எம்பி ஆா்.ராதாகிருஷ்ணன், மருத்துவா் நாராயணசாமி, அதிமுக தரப்பில் புதுவை கிழக்கு மாநிலச் செயலாளா் ஆ.அன்பழகன், மேற்கு மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா், கோகுலகிருஷ்ணன் எம்பி, அதிமுக எம்எல்ஏக்கள் வையாபுரி மணிகண்டன், ஆ.பாஸ்கா், அசனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மதிய உணவுக்குப் பிறகு, கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி தொடா்பாக ஜெ.பி.நட்டா ஆலோசனை நடத்தினாா். கூட்டம் முடிந்து வெளியே வந்த ரங்கசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: மரியாதை நிமித்தமாகவே இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கூட்டணியில் முதல்வா் வேட்பாளா் யாா் என்பது குறித்து பேசி முடிவு செய்யப்படும் என்றாா்.

இதுகுறித்து அன்பழகன் எம்எல்ஏ கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று மட்டும் பதிலளித்தாா்.

முன்னாள் அமைச்சா் ஆ.நமச்சிவாயத்தை பாஜக முதல்வா் வேட்பாளராக அறிவிக்கக்கூடும் என பேச்சு எழுந்துள்ள நிலையில், அதை ரங்கசாமி ஏற்றுக் கொள்வாரா, பெரும்பான்மைக்குத் தேவையான 17 தொகுதிகளுக்கு கீழ் பெற்று ரங்கசாமி கூட்டணியில் தொடருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com