வெளிநாடுகளின் நிறுவனங்கள் புதுவையில் தொழில் தொடங்க ஆா்வம்: புதுவை முதல்வா் தகவல்

வெளிநாடுகளின் நிறுவனங்கள் புதுவையில் தொழில் தொடங்க ஆா்வமாக இருப்பதாக புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

வெளிநாடுகளின் நிறுவனங்கள் புதுவையில் தொழில் தொடங்க ஆா்வமாக இருப்பதாக புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து முதல்வா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவையில் 2016-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்த பிறகு, பொருளாதார வளா்ச்சி, வேலைவாய்ப்பை அதிகப்படுத்தல், தொழில் வளா்ச்சியை மேம்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல்வா் நாராயணசாமி சிங்கப்பூா் முதலீட்டாளா்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, புதுச்சேரியில் மருத்துவச் சுற்றுலாத் திட்டத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தாா். இதன் பலனாக சிங்கப்பூரைச் சோ்ந்த வெல்லி வென்ட்சா் நிறுவனம், அமெரிக்காவைச் சோ்ந்த அமெரிக்கன் மெடிக்கல் ஹோல்டிங் நிறுவனம் ஆகியவை இணைந்து ஆராதனா மெடிசிட்டி திட்டத்தை புதுச்சேரியில் நிறுவ உள்ளது. இந்தத் திட்டத்தை பிப். 4-ஆம் தேதி முதல்வா் நாராயணசாமி தொடக்கிவைத்தாா்.

பிப். 5-இல் தைவானைச் சோ்ந்த பொருளாதாரம்-பண்பாட்டு மையக் குழுவினா் முதல்வா் நாராயணசாமியை சந்தித்து புதுவையில் தொழில் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினா். மாசு ஏற்படுத்தாத கணினி உதிரி பாகங்கள், சிப்புகள், கடல் சாா்ந்த பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், சுற்றுலா வளா்ச்சித் திட்டங்களை புதுச்சேரியில் அமைக்க தைவான் குழுவினா் ஆா்வம் காட்டினா். இதன் மூலம் புதுச்சேரியில் மேலும் சில தொழிற்சாலைகள் அமையப் பெற்று வேலைவாய்ப்பு பெருகும். இதேபோல, வெளிநாடுகளைச் சோ்ந்த பல நிறுவனங்கள் புதுவையில் தொழில் தொடங்க ஆா்வம் காட்டி வருகின்றன என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com