பாஜகவை புதுச்சேரியில் வேரூன்ற அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் வி. நாராயணசாமி

பாஜகவை புதுச்சேரியில் வேரூன்ற அனுமதிக்க மாட்டோம் என்று புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி தெரிவித்தார்.
முதல்வர் வி. நாராயணசாமி
முதல்வர் வி. நாராயணசாமி

பாஜகவை புதுச்சேரியில் வேரூன்ற அனுமதிக்க மாட்டோம் என்று புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி தெரிவித்தார்.

திருவாரூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி, திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் அறிவிக்கவில்லை. தேர்தல் அறிவித்த பின் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும். பாஜகவின் இருமொழிக் கொள்கையை எதிர்க்கிறோம். புதுச்சேரியில் மும்மொழி கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.

புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். நரேந்திர மோடி அரசு மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மின்சாரம், இன்சூரன்ஸ், விமானத்துறை, பாரத் பெட்ரோலியம், நிலக்கரி சுரங்கம், வங்கி, பிஎஸ்என்எல் உள்ளிட்ட அனைத்தையும் தனியார் மயமாக்கினால், அரசாங்கத்தை எவ்வாறு நடத்துவது.

பொதுத்துறை நிறுவனங்கள் இருப்பதற்கான காரணமே தனியார்துறை ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்காகத்தான். பொதுத் துறைக்கு காங்கிரஸ் அரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இப்போது அரசில் உள்ளவர்கள், அதானி, அம்பானி, அமெரிக்காவிடம் இந்தியாவையே அடமானம் வைத்து விடுவார்கள்.

மதவாத சக்திகள் பிரிவினைவாத சக்திகள் தலை எடுக்கக் கூடாது என்பதன் காரணமாகவே, நரேந்திர மோடியும், பாஜகவும் புதுச்சேரியில் வேரூன்ற அனுமதிக்க மாட்டோம். 30 கோடி இஸ்லாமியர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப முடியுமா..? இது நடக்குமா.? அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். எங்களுடைய மதச்சார்பற்ற அணி தான் இந்த நாட்டிற்கு பொருந்தும்.

யார் போராட்டம் நடத்தினாலும் அதைப்பற்றி கவலைப்படக் கூடாது என்பதுதான் நரேந்திர மோடி அரசின் தெளிவான கொள்கை. பிரதமர் காணொளி காட்சி வழியாக பேசி வருகிறார். இந்த ஆறு ஆண்டுகளில் எந்த பத்திரிகையாளரையாவது சந்தித்து நேரடியாக பேட்டி கொடுத்திறுக்கிறாரா? பிரதமரை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்ற சர்வாதிகார ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com