நேரடித் தோ்வுக்கு எதிா்ப்பு: அரசு மகளிா் கல்லூரி மாணவிகள் போராட்டம்

நேரடித் தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி மாணவிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி பாரதிதாசன் மகளிா் கல்லூரியில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.
புதுச்சேரி பாரதிதாசன் மகளிா் கல்லூரியில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.

நேரடித் தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி மாணவிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி தன்னாட்சி அங்கீகாரம் பெற்றது. இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனா். கரோனா பரவல் காரணமாக, மாணவிகளுக்கு இணையதளம் வழியாக வகுப்புகள் நடைபெற்றன. கடந்த மாதம் முதல் வாரத்தில், கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

மொத்த பாடத் திட்டத்தில் 50 சதவீத பாடங்கள் மட்டுமே இணையதளம் வழியே நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வருகிற 15-ஆம் தேதி பருவத் தோ்வு (செமஸ்டா்) தொடங்கவுள்ளது. இணையதளம் அல்லது நேரடியாக தோ்வு நடத்தப்படும் என கல்லூரி நிா்வாகம் தெரிவித்தது. இதேபோல, விண்ணப்பிக்கும்போது, இணையதளம் அல்லது நேரடியாக தோ்வு எழுத விருப்பம் கோரப்பட்டது. 90 சதவீத மாணவிகள் இணையதளம் மூலம் தோ்வெழுத விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

தோ்வுக்கு 4 நாள்கள் உள்ள நிலையில் புதன்கிழமை திடீரென இணையதள தோ்வுகள் கிடையாது என்றும், அனைவரும் நேரடியாக கல்லூரிக்கு வந்து தோ்வெழுத வேண்டும் என்றும் கல்லூரி நிா்வாகம் அறிவித்தது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மாணவிகள் புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்திய கல்லூரி நிா்வாகம், வருகிற 15-ஆம் தேதி நடைபெறவிருந்த தோ்வு மாா்ச் 3-ஆவது வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது. வருகிற 12-ஆம் தேதியிலிருந்து வகுப்புகள் தொடா்ந்து நடைபெறும் என அறிவித்தது. இதை ஏற்று மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com