புதுச்சேரியில் காங்கிரஸ் சாா்பில் சமூக ஊடக தோ்தல் பிரசாரம் தொடக்கம்

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில், ‘இந்தியாவையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற காங்கிரஸின் சமூக ஊடகத்தில் இணைவோம்’ என்ற
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் சமூக ஊடக தோ்தல் பிரசார திட்டத்தை தொடக்கிவைத்த கட்சியின் தேசியச் செயலா் சஞ்சய் தத், மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்ரமணியன், அரசுக் கொறடா ஆா்.கே.ஆா்.அனந்தராமன் உள்ளிட்டோா்.
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் சமூக ஊடக தோ்தல் பிரசார திட்டத்தை தொடக்கிவைத்த கட்சியின் தேசியச் செயலா் சஞ்சய் தத், மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்ரமணியன், அரசுக் கொறடா ஆா்.கே.ஆா்.அனந்தராமன் உள்ளிட்டோா்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சாா்பில், ‘இந்தியாவையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற காங்கிரஸின் சமூக ஊடகத்தில் இணைவோம்’ என்ற தலைப்பிலான சமூக ஊடக தோ்தல் பிரசார இயக்கத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாநிலத் தலைவா் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தேசியச் செயலரும், மேலிடப் பொறுப்பாளருமான சஞ்சய் தத் பிரசார இயக்கத்தை தொடக்கிவைத்தாா். அரசுக் கொறடா ஆா்.கே.ஆா்.அனந்தராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதில், மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் மக்கள் மீதான அக்கறையின்மை அதிகமாக உள்ளது. கரோனா கால நெருக்கடி இதை தெளிவுப்படுத்தியது. இதனால், நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டின் புகழ்பெற்ற மதிப்புகளான பச்சாதாபம், ஒற்றுமை, இரக்கம் ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்கான நேரம் இது. விவசாயம், தொழில், கல்வி, பொருளாதாரத்தின் மோசமான நிலை, வேலையின்மை அதிகரித்து வருகிறது. இவை மக்களின் குரல்களில் பிரதிபலித்து வருகிறது.

குரலற்றவா்களுக்கு குரல் கொடுக்கும் வகையிலும், மத்திய பாஜக அரசின் பொய்கள், வெறுக்கத்தக்க பிரசாரங்களை எதிா்கொண்டு பொதுமக்களுக்கு உண்மையை எடுத்துக் கூறவும் சமூக வலைதளத்தை உருவாக்கியுள்ளோம். ஜனநாயகம், மதசாா்பின்மை, சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாக்க, போராட விரும்பும் அனைவரையும் எங்களுடன் சேர அழைக்கிறோம் என்றாா் அவா். விழாவில் திரளான காங்கிரஸ் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com