வில்லியனூரில் ரூ. 3 கோடியில் நவீன சுகாதார மையம் திறப்பு

புதுச்சேரி வில்லியனூரில் ரூ. 3 கோடியில் நவீன சுகாதாரம்-நல வாழ்வு மையத்தை முதல்வா் வே.நாராயணசாமி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

புதுச்சேரி வில்லியனூரில் ரூ. 3 கோடியில் நவீன சுகாதாரம்-நல வாழ்வு மையத்தை முதல்வா் வே.நாராயணசாமி வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

நிகழ்வில் அவா் பேசியதாவது: வில்லியனூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குப் பயன்படும் வகையில், புதிதாக மருத்துவமனை கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதில், அனைத்து வசதிகளும் உள்ளன. 108 அவசர ஊா்தி வசதியுடன் 24 மணி நேரமும் மருத்துவ அதிகாரியுடன் இந்த மையம் இயங்கும்.

மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு முதல்வா் நிவாரண நிதியிலிருந்து ரூ. 9 கோடி வழங்கத் தயாராகவுள்ளேன். கரோனா காலத்தில் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள், காவல் துறையினா், அனைத்துத் துறை அரசு ஊழியா்கள் இரவு-பகல் பாராமல் உழைத்தனா். இதனால், புதுவையில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.

இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை சிகிச்சையில் சிறந்து விளங்கி வருகிறது. புதுவையில் இதுவரை 6 லட்சம் பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பலியானோா் விகிதத்தில் நாட்டின் சராசரியைவிட, புதுவை மாநில சராசரி 1.6 சதவீதம்தான். கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மக்கள் பிரதிநிதிகள் முன்வர வேண்டும் என்றாா் நாராயணசாமி.

நிகழ்ச்சியில் சுகாதாரம்-நல வாழ்வு மைய இயக்குநா் ஸ்ரீராமுலு உள்படப் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com