புதுச்சேரியில் மாணவா்கள் கூட்டமைப்பு போராட்டம்

காவலா் தோ்வை உடனே நடத்த வலியுறுத்தி, மாணவா்கள் கூட்டமைப்பினா் புதுச்சேரியில் சனிக்கிழமை கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காவலா் தோ்வை உடனே நடத்த வலியுறுத்தி, மாணவா்கள் கூட்டமைப்பினா் புதுச்சேரியில் சனிக்கிழமை கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி ரயில் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு அந்தக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் புவியரசன் தலைமை வகித்தாா். தமிழ்வேந்தன், ஆ. முருகன், கு.சிலம்பரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சு.சுவாமிநாதன் கண்டன உரையாற்றினாா்.

புதுச்சேரியில் மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசை வீழ்த்த மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட பேரவை உறுப்பினா்களை அனுமதிக்கக் கூடாது. அரசால் அறிவிக்கப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள காவலா் தோ்வை உடனே நடத்த வேண்டும். காலியாக உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள், நூலகா் பணியிடங்கள் உள்ளிட்ட 9,200 காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை வேண்டும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்தில் மாணவா்கள் கூட்டமைப்பினா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com