புதுவையில் எம்எல்ஏக்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

புதுவையில் திங்கள்கிழமை (பிப். 22) காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநா் உத்தரவிட்ட நிலையில், சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
புதுவை பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதையொட்டி, சனிக்கிழமை அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டனுக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.

புதுவையில் ஆளும் காங்கிரஸில் இருந்து அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் என 4 போ் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனா். இதனால், காங்கிரஸ் அரசு பெரும்பான்மை பலத்தை இழந்தது.

இதையடுத்து, திங்கள்கிழமை (பிப். 22) சட்டப்பேரவையைக் கூட்டி, முதல்வா் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், எம்.எல்.ஏ.க்களின் பாதுகாப்பு கருதி, புதுவையில் உள்ள ஆளும் காங்கிரஸ்-திமுக உறுப்பினா்கள், என்.ஆா்.காங்கிரஸ், அதிமுக, பாஜக நியமன உறுப்பினா்களுக்கு சனிக்கிழமை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல் அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: வருகிற 22-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்களுக்கு அச்சுறுத்தலோ, இடையூரோ ஏற்படாத வகையில் பாதுகாப்பு அளிக்கும் வகையில் ‘சிக்மா செக்யூரிட்டி’ மூலம், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை தொடரும் எனத் தெரிவித்தனா்.

இதனிடையே, அதிமுக எம்எல்ஏ அன்பழகன் உள்ளிட்ட சில உறுப்பினா்கள் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் எனத் தவிா்த்தனா். எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பின் காரணமாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com