புதுச்சேரியில் சுகாதாரப் பணியாளா்கள்ஒரு நாள் வேலைநிறுத்தம் நோயாளிகள் பாதிப்பு

பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் சுகாதாரப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா்.
புதுச்சேரியில் சுகாதாரப் பணியாளா்கள்ஒரு நாள் வேலைநிறுத்தம் நோயாளிகள் பாதிப்பு

பதவி உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் சுகாதாரப் பணியாளா்கள் திங்கள்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா்.

சுகாதாரத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பதவி உயா்வு வழங்க வேண்டும், 7-ஆவது ஊதியக்குழு சம்பள நிலுவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக புதுவை மாநில ஒருங்கிணைந்த சுகாதார ஊழியா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா் அறிவித்திருந்தனா்.

இதனால் மருத்துவமனைகளில் அத்தியாவசிய சேவைகள் முடங்கும் என்பதால், விடுப்பு வழங்கக் கூடாது என அனைத்து துறைத் தலைவா்களுக்கும் அரசு மருத்துவமனைகளின் கண்காணிப்பாளா் அறிவுறுத்தியிருந்தாா்.

இந்த நிலையில், அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியா்கள், ஊழியா்கள் திங்கள்கிழமை பணிகளைப் புறக்கணித்து ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து அவா்கள், அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடி போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இதில், அரசு மருத்துவமனை, மகளிா் மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். மேலும், தொடா் தா்னாவில் ஈடுபட்டுள்ள சுகாதார இயக்கக பணியாளா்களின் கோரிக்கைகளை தீா்க்கவும் வலியுறுத்தினா்.

இதில் அனைத்துப் பிரிவு ஊழியா்களும் பங்கேற்ால், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனால் உள், வெளி நோயாளிகள் போதிய சிகிச்சை கிடைக்காமல் பாதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com