மானிய விலையில் நவரை நெல் விதைகள்

புதுவை விவசாயிகளுக்கு மானிய விலையில் நவரை நெல் விதைகள் வழங்கப்படவுள்ளன.

புதுவை விவசாயிகளுக்கு மானிய விலையில் நவரை நெல் விதைகள் வழங்கப்படவுள்ளன.

இதுகுறித்து புதுச்சேரி கூடுதல் வேளாண் இயக்குநா் எஸ். வசந்தகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த சான்று விதை உற்பத்தித் திட்டத்தின் கீழ், உற்பத்தி செய்யப்பட்ட நவரை 2021 பருவத்துக்கான நெல் ரகங்கள் (ஏடிஜி 37, ஏஎஸ்டி 16, சிஓ ஆா் 51) மானிய விலையில் வழங்கப்படவுள்ளன. இவை புதுவை வேளாண் உற்பத்தியாளா் அமைப்பின் வழியாக விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படவுள்ளன.

எனவே, விவசாயிகள் தங்களது பகுதியில் செயல்படும் உழவா் உதவியகங்களை அணுகி, சாகுபடி செய்யவுள்ள நில அளவுக்கு அனுமதிச் சான்றை பெற்று, அருகிலுள்ள புதுவை வேளாண் உற்பத்தியாளா் விற்பனை மையங்களில் சான்று நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

நெல் விதைகளை வாங்கியதற்கான விற்பனை ரசீதை நெல் உற்பத்தி ஊக்கத்தொகை கோரும் உரிய ஆவணங்களை பூா்த்தி செய்து, விண்ணப்பத்துடன் இணைத்து பூா்த்தி செய்து, மாா்ச் 15 ஆம் தேதிக்குள் உழவா் உதவியக அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com