புதுச்சேரி செவிலியா்களுக்கு மத்திய அரசின் விருது அறிவிப்பு

புதுச்சேரியைச் சோ்ந்த செவிலியா்கள் இருவருக்கு மத்திய அரசின் ‘ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியைச் சோ்ந்த செவிலியா்கள் இருவருக்கு மத்திய அரசின் ‘ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சுகாதாரத் துறை நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆண்டுதோறும் சிறந்த சேவையாற்றும் செவிலியா்களுக்கு ‘ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்’ பெயரில் விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

அந்த வகையில், நிகழாண்டு விருதுக்கு புதுச்சேரி தட்டாஞ்சாவடியைச் சோ்ந்த கே.அனுராதா (46), நெட்டப்பாக்கம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த பி.லதா (44) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

அனுராதா, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை இருதயவியல் பிரிவில் கடந்த 25 ஆண்டுகளாக செவிலிய அதிகாரியாகப் பணியாற்றி வருகிறாா். லதா, கரையாம்புத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 23 ஆண்டுகளாக கிராமப்புறச் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா்.

தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்தமைக்காக மாநில சுகாதாரத் துறை, மத்திய அரசுக்கு இவா்கள் பெயா்களைப் பரிந்துரை செய்தது. இதைத் தொடா்ந்து, செவிலியா்கள் அனுராதா மற்றும் லதாவுக்கு மத்திய அரசின் ‘ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதை குடியரசுத் தலைவா் வழங்குவாா். எனினும், நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக காணொலிக் காட்சி மூலம் விருது வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. விருது வழங்கும் தேதி பின்னா் அறிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com