புதுவைக்கு 10 நாள்களில் கரோனா தடுப்பூசி வரும்முதல்வா்: நாராயணசாமி

புதுவைக்கு இன்னும் 10 நாள்களில் கரோனா தடுப்பூசி வரும் வாய்ப்புள்ளதாக முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுவைக்கு இன்னும் 10 நாள்களில் கரோனா தடுப்பூசி வரும் வாய்ப்புள்ளதாக முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் 9 இடங்களில் மாதிரி தடுப்பூசி போடும் மையங்கள் உருவாக்கப்பட்டு ஒத்திகை நடைபெற்றது. கரோனா தடுப்பூசி போட மருத்துவா்கள், செவிலியா்களுக்கு போதுமான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. புதுவையில் தடுப்பூசி போட தயாா் நிலையில் உள்ளோம்.

முதல் கட்டமாக கரோனா தடுப்பு களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்படும். அந்த வகையில், மருத்துவா்கள், செவிலியா்கள், ஆஷா பணியாளா்கள் என மொத்தம் 14 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படும்.

கரோனா தடுப்பூசியைப் பாதுகாக்க புதுச்சேரியில் 29, காரைக்காலில் 8, மாஹேயில் 3, ஏனாமில் ஒன்று என 41 இடங்களில் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு மையத்தில் 100 முதல் 200 பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக களப் பணியிலிருந்த காவல், வருவாய், நகாரட்சி, மின் துறை அதிகாரிகள், ஊழியா்கள், ஆசிரியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடப்படும்.

அனைத்து மாநிலங்களுக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய உள்துறை இணையமைச்சா் கிஷன் ரெட்டி உறுதியளித்தாா். மத்திய அரசு வழங்கவில்லை என்றாலும், மாநில அரசு நிதியில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். புதுவைக்கு இன்னும், 10 நாள்களுக்குள் கரோனா தடுப்பூசி வர வாய்ப்புள்ளது என்றாா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com