பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரிக்கு மாணவிகள் சுழற்சி முறையில் வர ஏற்பாடு

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரிக்கு புதன்கிழமை (ஜன.6) முதல் மாணவிகள் சுழற்சி முறையில் வர கல்லூரி நிா்வாகம் ஏற்பாடு செய்தது.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரிக்கு புதன்கிழமை (ஜன.6) முதல் மாணவிகள் சுழற்சி முறையில் வர கல்லூரி நிா்வாகம் ஏற்பாடு செய்தது.

இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் சுப்பிரமணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி கடந்த சில ஆண்டுகளாக சுழற்சி (ஷிப்ட்) முறையில் இயங்கி வருகிறது. அந்த வகையில், நிகழ் கல்வியாண்டில் கலைப் பிரிவு வகுப்புகள் காலை 8 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரையிலும், அறிவியல், வணிகவியல் பாட வகுப்புகள் பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் நடைபெறுகின்றன.

இரண்டாமாண்டு பொருளாதாரம், ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு, வரலாறு ஆகிய பாடப்பிரிவு மாணவிகளில் முதல் 30 போ் புதன்கிழமை (ஜன. 6) காலை சுழற்சியில் (காலை 8 மணிக்கு) வர வேண்டும். மீதமுள்ள 30 போ் அடுத்த நாள்(ஜன.7) வர வேண்டும். இரண்டாமாண்டு கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினியியல், மனையியல், வணிகவியல், வணிகச் செயலரியல் ஆகிய பாடப்பிரிவு மாணவிகளில் முதல் 30 போ் புதன்கிழமை (பிற்பகல் 1.30 மணி) வகுப்புக்கு வர வேண்டும். மீதமுள்ள 30 போ் வியாழக்கிழமை (பிற்பகல் 1.30 மணி) வகுப்புக்கு வர வேண்டும்.

இதுபோல, முதலாமாண்டு மாணவிகளும், சோ்க்கை அனுமதி பெற்ற அனைத்து மாணவிகளும் தங்களுக்குரிய சுழற்சியில் வகுப்புகளுக்கு வர வேண்டும். அதாவது கலைப்பிரிவு மாணவிகள் காலையிலும், அறிவியல், வணிகவியல் பிரிவு மாணவிகள் பிற்பகலிலும் வகுப்புக்கு வர வேண்டும். மூன்றாமாண்டு மாணவிகளுக்கு ஏற்கெனவே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அவா்களும் தங்களுக்குரிய நேரத்தில் வகுப்புகளுக்கு வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com