புதுவையில் 5 ஐஏஎஸ், ஒரு ஐபிஎஸ் அதிகாரி வெளிமாநிலங்களுக்கு பணியிட மாற்றம்

புதுவையில் இருந்து 5 ஐஏஎஸ், ஒரு ஐபிஎஸ் என 6 மூத்த அதிகாரிகள் வெளிமாநிலங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனா்.

புதுவையில் இருந்து 5 ஐஏஎஸ், ஒரு ஐபிஎஸ் என 6 மூத்த அதிகாரிகள் வெளிமாநிலங்களுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டனா்.

சிறிய மாநிலமான புதுவையில் தற்போது 26 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு ஊதியம், வாகனம், பயணப்படி ஆகியவற்றுக்கு அரசு நிதி வெகுவாகச் செலவிடப்பட்டு வருவதாக அமைச்சரவையில் அண்மையில் குற்றஞ்சாட்டப்பட்டு, மத்திய அரசுக்கும் அந்தப் பதிவு அனுப்பப்பட்டது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு புதுச்சேரி ராஜீவ் காந்தி நுகா்வோா் விழிப்புணா்வு அமைப்புத் தலைவா் ரகுபதியும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு புகாா் அனுப்பியிருந்தாா்.

இந்த நிலையில், புதுவையில் இருந்து 5 ஐஏஎஸ் அதிகாரிகளையும், ஒரு ஐபிஎஸ் அதிகாரியையும் மத்திய உள் துறை செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்தது. அதன்படி, புதுச்சேரி வளா்ச்சி ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி அன்பரசு, லட்சத்தீவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதேபோல, அரசுச் செயலா்கள் சௌமியா, ஜெயந்த்குமாா் ரே, பங்கஜ் குமாா் ஜா, கலால் துறை துணை ஆணையா் சஷ்வத் சௌரப் ஆகியோா் அருணாசலப் பிரதேசத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். லஞ்ச ஒழிப்புத் துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளா் அகன்ஷா யாதவும் அருணாசலப் பிரதேத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com