புதுச்சேரியில் பலத்த மழை
By DIN | Published On : 07th January 2021 07:19 AM | Last Updated : 07th January 2021 07:19 AM | அ+அ அ- |

புதுச்சேரியில் புதன்கிழமை அதிகாலை முதல் நண்பகல் வரை பலத்த மழை பெய்தது. இதனால், இந்திரா காந்தி சதுக்கம், ரெயின்போ நகா், கிருஷ்ணா நகா், வெங்கட்டா நகா் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீா் சூழ்ந்தது.
பாகூா், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கரையாம்புத்தூா், நெட்டப்பாக்கம், திருக்கனூா் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களிலும், கடலூா் - புதுச்சேரி பிரதான சாலையிலும் மழைநீா் தேங்கியது. விவசாய நிலங்களிலும் தண்ணீா் தேங்கி நின்றது. பலத்த மழையால் பள்ளி, கல்லூரி சென்ற மாணவா்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் புதன்கிழமை மாலை 5.30 மணி வரை புதுச்சேரியில் 76 மி.மீ. மழை பதிவானது.